குப்பாண்டபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

குப்பாண்டபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு
X

வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் சான்றிதழை வழங்கினார்.

அத்தாணி அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. இதில் 4-வது வார்டு உறுப்பினர் கைலாசம் தனது பதவியை ராஜினாமா செய்ததால், தற்செயல் தேர்தல் வரும் ஜூலை 9-ந்தேதி நடக்க இருந்தது. இதில் போட்டியிட 4-வது வார்டு ஆலமரத்தூர் பகுதியைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சுயேட்சை வேட்பாளர் துரைசாமி (வயது 32) வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வார்டுக்கு வேறொரு எந்த நபரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் துரைசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்ட அதற்கான சான்றிதழை ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி ஒன்றிய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை இன்று குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில் வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!