கோபி அருகே வருவாய்த் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

Erode news- கள்ளிப்பட்டியில் வருவாய்த்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Erode news, Erode news today- கோபி அருகேயுள்ள கள்ளிப்பட்டியில் வருவாய்த்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொண்டையம்பாளையம் மற்றும் பெருமுகை ஊராட்சிக்கு உள்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயந்தன் மற்றும் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கள்ளிப்பட்டி கடை வீதி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கிய படி தடப்பள்ளி வாய்க்கால் வரை ஊர்வலமாக சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu