தேர்தல் விழிப்புணர்வு நாடகம்: அசத்திய ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்

தேர்தல் விழிப்புணர்வு நாடகம்: அசத்திய ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்
X

Erode news- ஈரோடு பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு நாடகத்தை நடத்திய கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்.

Erode news- ஈரோட்டில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Erode news, Erode news today- ஈரோட்டில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை, இந்திய தேர்தல் ஆணையம், பாசம் பவுண்டேஷன் மற்றும் எலெக்ட்ரோல் லிட்ரசி கிளப் ஆகியோர் இணைந்து தேர்தல் விழிப்புணர்விற்கான வீதி நாடகத்தை ஈரோடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை (நேற்று) மாலை நடத்தினர்.


இதில், கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் அவர்கள் முன்னிலை வகித்தார்.சமூகப்பணித்துறைத் தலைவர் பூந்தமிழன் நாடகத்தை ஒருங்கிணைத்தார். இந்த வீதி நாடகத்தை 25க்கும் மேற்பட்ட சமூகப் பணித்துறை மாணவர்கள் கலந்து கொண்டு திறம்பட நடத்தினர். இந்நாடகத்தில் ஏராளமானப் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றன. நாடகத்தைத் திறம்பட நடத்திய சமூகப் பணித்துறை மாணவ மாணவர்களை கல்லூரியின் தாளாளரும் முதல்வரும் மற்றும் பொதுமக்களும் வாழ்த்திப் பாராட்டினார்.

Tags

Next Story
ai solutions for small business