கோபி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
X

யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறைபாளையம் அண்ணா நகர் எஸ்.டி. காலனியை சேர்ந்தவர் மணி. இவர் உயிரிழந்து விட்டார். இவருடைய மனைவி மணியம்மாள் (வயது 63). இவர் நேற்று (24ம் தேதி) காலை அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களுடன் டி.என்.பாளையம் வனப்பகுதிக்குள் விறகு பொறுக்க சென்றார்.

விறகு பொறுக்கியதும் அனைத்து பெண்களும் மதியம் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மணியம்மாள் மட்டும் வெரு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் கரிக்கல் மாதையன் கோவில் பகுதியில் அவர் பிணமாக கிடந்தார்.

உடனே, இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். மணியம்மாள் விறகு பொறுக்கி கொண்டிருந்த போது அங்கு வந்த காட்டு யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானை மிதித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா