/* */

தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுத்தால் இளங்கோவன் தகுதி நீக்கம்: எஸ்.பி.வேலுமணி

தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் ஈவிகேஎஸ் இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

HIGHLIGHTS

தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுத்தால் இளங்கோவன் தகுதி நீக்கம்: எஸ்.பி.வேலுமணி
X

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, அமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், ஈரோடு வீரப்பன்சத்திரம், சாந்தான் காடு பகுதியில் பொதுமக்களை சந்தித்து அண்ணா திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.


அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில், நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். இதை பார்க்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. ஈரோடு மாவட்டத்தில் அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில் தான். அனைத்து மக்களுக்கும் ஓடோடி வந்து பணியாற்ற தென்னரசு தயாராக இருக்கிறார். கடந்த 21 மாத ஆட்சியில் திமுக அரசு சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணத்தை மட்டும் நம்பி இந்த தேர்தலில் நிற்கிறார்.


21 மாதத்தில் மிகப்பெரிய கூட்டு கொள்ளை அடித்து அந்த பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க நினைக்கிறார். அது நடக்காது. பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பெண்களுக்கு உரிமை தொகை இதுவரை தரவில்லை. இதேபோல் திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சொத்து வரி, பால் விலை உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள்.ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். விதிகளை மீறி திமுக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.


இந்த தேர்தல் வெற்றி என்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமன்றி, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெறும். அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அண்ணா திமுக அமோகமாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல் -அமைச்சராக பொறுப்பேற்பார்.

அதற்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்ற அடித்தளமான இருக்கும் என்றார். பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பொன்னையன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 13 Feb 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...