ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா
X

காமராஜர் பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி சார்பில் மாணிக்கம் பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப் பை வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு இளைஞரணி சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா மாணிக்கம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது

ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு இளைஞரணி சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா, மாணிக்கம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச புத்தகப்பை, எழுதுப்பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.


இந்த விழா மாவட்ட இளைஞரணி தலைவர் நெல்லை ராஜா தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் பாவத்தாள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பாக அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் பி.திருமூர்த்தி, மாவட்ட ஆலோசகர் ஞானப்பால், மாவட்டத் தலைவர் சண்முகவேல், மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் உதயம் பி.செல்வம், மாணிக்கம்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆனந்தராஜ் மற்றும் துணைப் பொருளாளர் கோவில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடைபெற்ற விழாவில் காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது‌. தொடர்ந்து, பள்ளி குழந்தைகளுக்கு காமராஜர் பற்றி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு, இலவச புத்தகப்பை, எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் வரவேற்றார். இறுதியில் மாவட்ட இளைஞரணி பொருளாளர் சேகர் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் எஸ்கேஎம்.பாலகிருஷ்ணன் மற்றும் ஆர்கேஎஸ்.தமிழரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture