எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள்

எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் இன்று மாலை பிரச்சாரத்தை துவங்குகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்குகிறார். வீரப்பன்சத்திரம், பெரியார் நகர் பகுதியில் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டுகிறார். வீரப்பம்பாளையத்தில் முதலில் பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து விவேகானந்தா சாலை, கணபதி நகர் சாலை, வெட்டுக்காட்டு வலசு வழியாக நாராயண வலசு வருகிறார். அங்கு மக்கள் மத்தியில் பேசுகிறார்.
பின்னர் ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி, அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட் - ஈ பிளாக் - புறநகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர் வழியாக டவர் லைன் காலனி வந்து அங்கு பேசுகிறார். குமலன்குட்டையில் (மாரியம்மன் கோயில் அருகில்) பிரச்சாரம் செய்து விட்டு செல்வம் நகர், முருகேசன் நகர், சரோஜினி நகர், திரு.வி.க. வீதி, டீச்சர்ஸ் காலனி வழியாக ஆட்சியர் அலுவலகம் வருகிறார். அங்கும், சம்பத் நகர் பகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
காசியண்ணன் வீதி, ஆண்டவர் வீதி, காளியப்ப கவுண்டர் தோட்டம், ஹவுசிங் யூனிட் வழியாக பெரியவலசு நால் ரோடு வருகிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்து விட்டு, வள்ளியம்மை வீதி, பிரசாத் வீதி, லால்பகதூர் வீதி, வாய்க்கால்மேடு, இந்திரா நகர், ராதாகிருஷ்ணா வீதி, கொங்குநகர் 1, 2, சுப்பிரமணிய சிவா வீதி, கொத்துக்கார வீதி, ஔவையார் வீதி, சேக்கிழார் வீதி, ஜான்சி நகர் வழியாக கல்யாண விநாயகர் கோயில் வந்து அங்கு பேசுகிறார்.
பின்னர் அப்பன் நகர், முனிசிபல் காலனி, மாணிக்கம் வீதி, பவளம் வீதி, சத்யா வீதி, நகராட்சி குடியிருப்பு, பாலசுப்பிரமணிய நகர் லே அவுட், அண்ணாமலை லேஅவுட், சின்னமுத்து வீதி 1, 2, வாரணாசி வீதி, இடையன்காட்டுவலசு (பிரபா தியேட்டர் வழி), இராஜகணபதி விநாயகர் கோயில், சின்னமுத்து மெயின் வீதி, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரஃப் ரோடு), கலைமகள் பள்ளி வழியாக ளு.மு.ஊ. ரோடு, பவர்ஹவுஸ் வீதி, படேல் வீதி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர் ஆர்ச், காந்திஜி ரோடு வழியாக பன்னீர்செல்வம் பார்க் வருகிறார்.
அங்கு பிரச்சாரம் செய்து ஈஸ்வரன் கோயில் வீதி, கொங்கலம்மன் வீதி, மஜீத் வீதி, எல்லை மாரியம்மன் கோயில், சக்தி மெயின் ரோடு, பேருந்து நிலையம், சத்தி மெயின் ரோடு, ஏ.பி.டி. ரோடு, சாந்தாங்காடு, அபிராமி வீதி, காந்திஜி வீதி, அண்ணாமலை நகர், ஜான்சி நகர், பாரதி வீதி, எம்.ஜி.ஆர். வீதி, குமரன் வீதி, தங்கவேல் வீதி, துரைசாமி வீதி, பாரதிதாசன் வீதி, திரு.வி.க. வீதி, ஐயர் காடு, சக்தி நகர் வழியாக வீரப்பன்சத்திரம் வருகிறார். அங்கு இன்றைய பிரச்சாரத்தை முடிக்கிறார். 2 ம் நாள் நாளை அக்ரஹாரம், அசோகபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu