ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 இடங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 இடங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
X

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி கவுந்தப்பாடி ஆவரங்காட்டூர் பிரிவில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று (ஏப்.,5) மாலை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று (ஏப்.,5) மாலை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் இன்று (ஏப்.,5) வெள்ளிக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு வாக்குகள் கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். ஈரோடு அவல்பூந்துறை சாலையில் உள்ள கஸ்பாபேட்டையில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார் . முன்னதாக திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து கவுந்தப்பாடி ஆவரங்காட்டூர் பிரிவில் மாலை 4 மணிக்கு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future