கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி
X

விவசாயியை அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ காட்சி.

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்ட முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 55) என்பவருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி செந்தில்குமார் தனது நிலத்தில் தனது உறவினர்களுடன் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த கருப்புசாமி செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதில், காயமடைந்த செந்தில்குமார் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story
ai and future cities