அந்தியூர் அருகே ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு
கலைநாதன்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூச்சிக்கல்லூர் சேர்ந்த பழனிச்சாமி மகன் கலைநாதன் 24. ஓட்டுனரான இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த கலைநாதன் களைப்புடன் காணப்பட்டதால், அவரது அண்ணன் கார்த்திகேயன் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன் பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கலைநாதனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu