"கழுதைப்பால் வாங்கலியோ..கழுதைப்பால்.." கோபியில் கூவி கூவி விற்பனை..! விலையை கேட்டா அசந்துடுவீங்க..!

கழுதைப்பால் வாங்கலியோ..கழுதைப்பால்.. கோபியில் கூவி கூவி  விற்பனை..! விலையை கேட்டா அசந்துடுவீங்க..!
X

மொடச்சூரில் கழுதை பால் விற்பனை நடைபெறுவதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் கழுதை பால் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் கழுதை பால் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் சில பகுதிகளில் கழுதைப் பால் குடிப்பதால் இருமல், சளித்தொல்லை நீங்கி, ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும், மேலும் மருத்துவ குணம் கொண்டது என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்போதும், கிராமங்களில் கழுதைப் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீராளன், சின்னதுரை. இவர்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பல ஆண்டுகளாக ஊர் ஊராகச் சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பெரம்பலூரில் இருந்து 12 கழுதைகளுடன் புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூர் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் தங்கியுள்ள இவர்கள் காலை முதலே கழுதை பால் விற்பனையை தொடங்குகின்றனர்.

கோபி மட்டுமின்றி அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று கூவி கூவி கழுதைப் பால் விற்கின்றனர். ஒரு சங்கு (100 மில்லி) கழுதை பால் ரூ.400க்கும். ஒரு லிட்டர் ரூ.4 ஆயிரத்துக்கும் விற்பனை செய்கிறார்கள். இப்பால் குழந்தைகள் உடலுக்கு நல்லது என்று கூறி மக்களும் ஆர்வமுடன் கழுதைப் பாலை வாங்கி கொடுத்து வருகின்றனர்.

Tags

Next Story