ஆளுநரைக் கண்டித்து திமுகவினர் ஈரோட்டில் மாபெரும் உண்ணாவிரதம்

ஆளுநரைக் கண்டித்து திமுகவினர்   ஈரோட்டில்  மாபெரும் உண்ணாவிரதம்
X

மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம்

erode news in tamil - ஈரோட்டில் வரும் 20ம் தேதி ஆளுநரைக் கண்டித்து திமுகவினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

erode news in tamil - ஈரோட்டில் வரும் 20ம் தேதி ஆளுநரைக் கண்டித்து திமுகவினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இளைஞர் அணி மாணவர் அணி மருத்துவர் அணி சார்பாக நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு ஆளுநரைக் கண்டித்து ஈரோடு, வீரப்பன்சத்திரம், சிக்கநாயக்கர் கல்லூரி அருகில் 20.08.2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது.

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப்போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் - இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போரில் ஆர்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து சார்ப்பு அணிகளின் நிர்வாகிகள் இந்த ஏற்பாட்டினை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!