ஈரோட்டில் அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
X

ஈரோட்டில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோட்டில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாபாசாகிப் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 14ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான முத்துசாமி, அம்பேத்கரின் 134வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கும், அதனை தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.

இதில், ஈரோடு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் சுப்ரமணியம், மேயர் நாகரத்தினம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business