ஈரோட்டில் திமுக, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை
நாடாளுமன்றத் தேர்தல் 2024 (பைல் படம்).
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு தொகுதியில் திமுகவும், திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி:-
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது.
திமுக (கே.இ.பிரகாஷ்) - 74,284
அதிமுக (ஆற்றல் அசோக்குமார்) - 39,996
நாம் தமிழ் கட்சி (கார்மேகன்) - 11,306
பாஜக கூட்டணி தமாகா (விஜயகுமார்) - 9,610
இதன் மூலம் திமுக வேட்பாளர் பிரகாஷ் 34,288 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி:-
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் (சுப்பராயன்) - 69,560
அதிமுக (அருணாசலம்) - 52,397
பாஜக (முருகானந்தம்) - 24,305
நாம் தமிழ் கட்சி (சீதாலட்சுமி) - 10,735
இதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை விட 17,163 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகளை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது Native News தமிழ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu