ஈரோட்டில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் திமுகவினர் நூதன பிரசாரம்..!

ஈரோட்டில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் திமுகவினர் நூதன பிரசாரம்..!
X

ஈரோடு பேருந்து நிலையத்தில் சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஈரோட்டில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் திமுகவினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர்.

ஈரோட்டில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் திமுகவினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஒரு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. வரும் 17ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளதால் தற்போது ஈரோட்டில் உச்சகட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… மேலும் மக்களுக்கு முதலமைச்சர் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளையும் எடுத்து கூறி திமுக எம்.பிக்கு வாக்களியுங்கள் என கூறி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு மாநகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...ஜக்கம்மா சொல்ற... ஜக்கம்மா சொல்ற... என பரப்புரை மேற்கொண்டார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு