ஈரோட்டில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்..!

ஈரோட்டில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்..!

ஈரோட்டில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் (பைல் படம்).

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்கிடும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரங்கம்பாளையம், டாக்டர் . ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து இளைஞர்களும் (ஆண், பெண் இருபாலரும்) கலந்துகொண்டு பயன்பெறலாம். இதர விவரங்கள் குறித்து அறிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம்,பூமாலை வணிக வளாகம், குமலன் குட்டை,பெருந்துறை சாலை, ஈரோடு - 638011 என்ற முகவரியிலும், 94440 94274 என்ற கைப்பேசி எண்ணிலும், dpiu_erod@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Similar Posts
கோபிசெட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை
பவானி நகராட்சியில் கள ஆய்வு  மேற்கொண்ட ஈரோடு ஆட்சியர்
பவானி சன்னியாசிபட்டி மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பேருந்து நிலைய கழிப்பிடத்தை சுத்தம் செய்ய மனு குடுங்க..! எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் பகீர்..!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
பவானியில் பொதுமக்களிடம் இருந்து 82 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் 18 போலீசார் பணியிட மாற்றம்
கடம்பூர் மலைப்பகுதியில் வீதி நாடகம் மூலம் சட்ட விழிப்புணர்வு
பவானி அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு
ஈரோட்டில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்..!
பிந்தரன்வாலே துறவி அல்ல: எமர்ஜன்சி பட நாயகி கங்கனா ரணாவத் எம்பி பேச்சு
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க உதவும் சீட்டா திட்டம்