தமிழ் புதல்வன் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 9,012 மாணவர்கள் பயன்: ஆட்சியர்

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 9,012 மாணவர்கள் பயன்: ஆட்சியர்
X

Erode News- ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம். உடன், மேயர் நாகரத்தினம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் உள்ளிட்டோர் உள்ளனர்.

Erode News- தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 91 கல்லூரிகளைச் சேர்ந்த 9,012 மாணவர்கள் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

Erode News, Erode News Today- ஈரோடு மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 91 கல்லூரிகளைச் சேர்ந்த 9,012 மாணவர்கள் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (9ம் தேதி) தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சித்தோடு ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 91 கல்லூரிகளைச் சேர்ந்த 9,012 மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.


பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின், மூலம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 91 கல்லூரிகளில் பயிலும் 9,012 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதனை அடிப்படையாகக் கொண்டு, புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 101 கல்லூரிகள் பதிவு செய்துள்ள 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேர்ந்த 7,679 மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்கள் பயன்பெறுவதற்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். மாணவர்கள் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

ஒரு குடும்பத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து ஆண் குழந்தைகளும் இத்திட்டத்தில் பயனடையலாம். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது.

இத்திட்டத்தின், கீழ் தகுதியுடைய மாணவர்கள் முதல் பட்டப் படிப்பினை முடிக்கும் வரை மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.1,000 நேரடியாக பற்று வைக்கப்படும். மாணவர்கள் இத்திட்டத்தின் பயன்பெற தங்களது வங்கி கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி கடன் மேளா நடத்தப்பட்டு வருகிறது. கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவியர்களுக்கு வித்யாலட்சுமி (https://www.vidyalakshmi.co.in/Students) மற்றும் ஜன்சமர்த் (https://www.jansamarth.in/home) ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்துக் பயன்பெறலாம்.

மேலும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!