பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

சுள்ளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் குள்ளம்பாளையம், சீனாபுரம், திங்களூர் மற்றும் பெரியவீரசங்கிலி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, குள்ளம்பாளையம் ஊராட்சி குள்ளம்பாளையத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குள்ளம்பாளையம் கணக்கம்பாளையம் வரை 2.88 கி.மீ நீளத்திற்கு ரூ. 1.13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார்சாலை மேம்பாடு செய்யும் பணியினையும், குள்ளம்பாளையம் ஊராட்சியில் சீனாபுரம் சுள்ளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை பொருட்களின் இருப்பு மற்றும் தரம் மற்றும் நியாய விலைக்கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, சீனாபுரம் ஊராட்சி சீனாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சீனாபுரம் அங்கன்வாடி முதல் துடுப்பதி நடுப்பட்டி சாலை வரை ரூ.9.96 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியினையும், திங்களூர் ஊராட்சி திங்களூரில் 15 நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.53.74 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினையும், அதேப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.12.47 இலட்சம் மதிப்பீட்டில் தானிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பெரியவீரசங்கிலி ஊராட்சி பெரியவீரசங்கிலியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைகடை கட்டப்பட்டு வருவதையும், கைக்கோளபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.9.83 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆண்கள் கழிப்பறையினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வுகளின்போது, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!