சத்தியமங்கலம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம்

சத்தியமங்கலம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம்
X

21ம் தேதி மனுநீதி நாள் முகாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்

சத்தியமங்கலம் வட்டம் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் அரசூர் உள்வட்டம் மாக்கினாங்கோம்பை கிராமம், குயவன்குழி என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வரும் 21ம் தேதி (நாளை மறுநாள்) புதன்கிழமை காலை 11 மணி அளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் சத்தியமங்கலம் வட்டம், அரசூர் உள்வட்டம், மாக்கினாங்கோம்பை கிராமம், குயவன்குழி என்ற இடத்தில் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!