/* */

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிருக்கான வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டாா்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.கே.சி. நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளதையும், சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வருவதையும், காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிருக்கான வாக்குச்சாவடி மையம், கழிப்பறை வசதி, சாய்வு தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், மாநகர பொறியாளர் திரு.விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 16 April 2024 12:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது