பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சேதமான பகுதிகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பொதுமக்கள் அணையா தீபம் நிவாரண குழுவினருடன் இணைந்து, நிவாரணப் பொருட்களை சேகரித்தனர். அரிசி, பருப்பு, பால் பவுடர், போர்வை, துணிகள், சேமியா, பிஸ்கட், நாப்கின், மெழுகுவர்த்தி, சீனி, பாய் ,கொசுவர்த்தி என மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாமிற்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu