அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி: ஈரோட்டில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Erode news- சமூகநீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல்ராமன் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Erode news, Erode news today- அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை, ஈரோட்டில் அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அருந்ததியர் சமூகத்துக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் எனவும், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதனை வரவேற்றும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அம்பேத்கர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சமூகநீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல்ராமன் தலைமை தாங்கி, அம்பேத்கர் மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் சிந்தனை செல்வன், வெள்ளிங்கிரி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன், தலித் விடுதலை கட்சி மாநில அமைப்பாளர் ஆறுமுகம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu