ஈரோட்டில் பேரிடர் கால மீட்பு பணி குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு பயிற்சி

ஈரோட்டில் பேரிடர் கால மீட்பு பணி குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு பயிற்சி
X

Erode news- ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்புத் துறையின் மூலம் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

Erode news- ஈரோட்டில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி அளித்தனர்.

Erode news, Erode news today- ஈரோட்டில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி அளித்தனர்.

ஈரோடு தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், தீத்தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினரோடு இணைந்து பணியாற்றுவது குறித்தும், தீயணைப்புத் துறையின் மூலம் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்த பயிற்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், இன்று (20ம் தேதி) அளிக்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணிகள் துறையின் சார்பில் தீ விபத்து ஏற்படும் பொழுது, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பொழுது தங்களை பாதுகாத்துக் கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது உள்ளிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெள்ள அபாய ஒத்திகை பயிற்சிகளும், தீத்தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று (20ம் தேதி) ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட தீத்தன்னார்வலர்களுக்கு 40 நபர்களுக்கு பேரிடர் காலங்களான வெள்ளம், பெருந்தீ விபத்து, சாலை விபத்து, வனத்தீ உள்ளிட்ட சூழ்நிலை ஏற்படும் பொழுது தீயணைப்பு துறையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும், தீயணைப்பான்களை இயக்கும் விதம், தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஊர்திகள் மற்றும் அவசர கால ஊர்தி உபகரணங்கள் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது ஆகியவற்றை குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் விளக்கமளித்து பயிற்சி வளங்கினார்.

இப்பயிற்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தீத்தன்னார்வலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!