ஈரோடு, கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்

ஈரோடு, கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்
X

அரசு ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை.

ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வரும் 30ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்) மற்றும் பொறியியல் அல்லாத (கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் கட்டிடபட வரைவாளர்) மற்றும் இண்டஸ்ட்ரீ 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்பட்டுள்ள தொழிற் பிரிவுகளில் முதற்கட்ட கலந்தாய்வு சேர்க்கை நிறைவடைந்து, 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூ.750, விலையில்லா சைக்கிள், சீருடை, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு "புதுமைப் பெண்" திட்டத்தின் கீழும் மற்றும் ஆண் பயிற்சியாளர்களுக்கு "தமிழ் புதல்வன்" திட்டத்தின் கீழும் ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும். 8ம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது.

மேலும், விபரங்களுக்கு ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 0424-2275244, 70108 75256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:- (அசல் மற்றும் நகல்) 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு முடித்திருப்பின் 9ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்), மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 4, விண்ணப்பக் கட்டணம் ரூ.50ம், சேர்க்கைக் கட்டணம் இரண்டாண்டு பிரிவுகளுக்கு ரூ.195 மற்றும் ஓராண்டு பிரிவுகளுக்கு ரூ.185ம் செலுத்த வேண்டும்.

எனவே, மேற்கண்ட ஆவணங்களை நேரில் எடுத்து வந்து நேரடி சேர்க்கை மூலம் பயன் பெறுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business