அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அந்தியூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டமானது, அந்தியூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தியூர் வட்டாரம் சார்பாக, சி.பி.எஸ். ரத்து இடைக்கால ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்,அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!