ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்
X

Erode news- ஈரோடு கருங்கல்பாளையத்தில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கருங்கல்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில், தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூபாய் 1,000 இருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.

பஞ்சபடியுடன் கூடிய ஓய்வூதியம் தொழிலாளர்களின் ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30 ஆயிரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை பொறுப்பாளர் அந்தியூர் துரைசாமி தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் டி. முருகேசன் முன்னிலை வகித்தார் நடைபெற்றது.

தொடர்ந்து கோரிக்கை மனு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மாவட்ட அலுவலரிடம் அளிக்கப்பட்டது. இதில் பாரதிய மஸ்தூர் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்டத் துணைப் பொறுப்பாளர்கள் கோபிசெட்டிபாளையம் தண்டபாணி, செல்வம் கொடுமுடி பொறுப்பாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் டி.சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai marketing future