அந்தியூரில் வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட பர்கூர் மலைவாழ் மக்கள்.
வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு வனக்கோட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி ஆகிய வனச்சரகங்களை உள்ளடக்கிய 80,000 ஹெக்டர் வனப்பகுதியை தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து, கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பர்கூர் வனப்பகுதியை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனவிலங்கு சட்டம் 2006-ஐ அமல்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட குழு செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார்.
பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் குணசேகரன், சுடர் அமைப்பு நிறுவனர் நடராஜ் மற்றும் அனைத்து கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu