அருந்ததியர் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

அருந்ததியர் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த கோரிக்கை
X

சமூக நீதி மாநாட்டில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி.

அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3ல் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி மாநில நிறுவனர் தலைவர் வடிவேல் ராமன் வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் பரிந்துரையின்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3ல் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி மாநில நிறுவனர் தலைவர் வடிவேல் ராமன், அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சியின் மாநில அளவிலான முதல் மாநாட்டில் அவர் விடுத்துள்ள கோரிக்கைகள், அருந்ததியர்கள் தூய்மைப் பணிகளைச் செய்வதால், மற்றவர்கள் அவர்களை அவமதிக்கின்றனர். எனவே, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களும் இத்தகைய பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.

சக்கிலியர், மாதிகா, பகடை, மாதாரி,தோட்டி, செம்மான், ஆதி ஆந்திரா ஆகிய அனைத்து உட்பிரிவினரையும் அருந்ததியர் என அழைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எஸ்சிக்கள் 3 உட்பிரிவுகளாக இருப்பதால்-ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர்-ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி அல்லது எஸ்சி நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் .

பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மானியம் ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் . விஏஓக்கள் ஆண்டு வருமானம் ரூ.72,000 கீழ் சான்றிதழ் வழங்காததால், ஏழைகள் அரசின் சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும்.அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!