ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு சுற்று எண்ணிக்கை அறிவிப்பில் தாமதம்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு சுற்று எண்ணிக்கை அறிவிப்பில் தாமதம்
X
Erode news- சுற்று எண்ணிக்கை அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் சுற்று அறிவிப்பை விரைவில் வெளியிட செய்தியாளர்கள் வலியுறுத்தினர்.
Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதி சுற்று எண்ணிக்கை அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதி சுற்று எண்ணிக்கை அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக, ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் சுற்றுகள் எண்ணிக்கை அறிவிப்பதில் இரண்டு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவை ஈரோடு செய்தியாளர்கள் சூழந்து வாக்கு எண்ணிக்கையை விரைவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, விரைவில் சரி செய்யப்படும் எனவும், மற்ற தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை சீராக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

Tags

Next Story
photoshop ai tool