/* */

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்: கலெக்டர்

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததார்.

HIGHLIGHTS

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்: கலெக்டர்
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

பொது வினியோக திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் வருகிற நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வருகிற 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 1,134 ரேஷன் கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற வருகிற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த வினியோகம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்புபவர்களுக்கு வழங்கப்படும். அனைவருக்கும் இதனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள் வழக்கம்போல் பண்டிகை காலம் முடிந்து வருகிற 8-ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்கள் வழங்கும் முன்பு கிருமி நாசினி கொண்டு கைரேகை பதிவு செய்யும் எந்திரத்தை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது விரல்களை ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Updated On: 27 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?