டிசம்பர் 6: ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

டிசம்பர் 6: ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
X
டிசம்பர் 6-ந் தேதியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

நாளை டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஈரோடு ரெயில்வே நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு துவங்கி உள்ளது. ஈரோடுக்கு வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களின் பை, சூட்கேஸ்களை சோதனை செய்கின்றனர். ரெயில்கள், ரெயில்வே பிளாட்பார்ம்கள், ரெயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதி, காவிரி பாலம் என பல்வேறு இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளிடம் சோதனை, தீவிர கண்காணிப்பு, நாளை 6-ந் தேதி நள்ளிரவு வரை தொடரும் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!