ஈரோட்டில் கடன் தீர்வு திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஒப்பந்த சான்றிதழ் வழங்கல்

ஈரோட்டில் கடன் தீர்வு திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஒப்பந்த சான்றிதழ் வழங்கல்
X

Erode news- கடன் தீர்வு திட்ட முகாமில் பயனாளி ஒருவருக்கு ஒப்பந்த சான்றிதழை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் வழங்கினார்.

Erode news- ஈரோடு திண்டலில் நடைபெற்ற பண்ணை சாரா கடன் தீர்வு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஒப்பந்த சான்றிதழை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் வழங்கினார்.

Erode news, Erode news today- ஈரோடு திண்டலில் நடைபெற்ற பண்ணை சாரா கடன் தீர்வு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஒப்பந்த சான்றிதழை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பண்ணைச் சாரா கடன் தீர்வு திட்ட முகாம் சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது. இந்த முகாமினை, ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஒப்பந்த சான்றிதழை வழங்கினார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பல் நோக்கு கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் அரசு அறிவித்தபடி, பண்ணை சாரா கடன் தீர்வு திட்ட முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில், வரும் மார்ச் 12ம் தேதிக்குள் கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அரசின் சலுகையை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது, ஈரோடு கூட்டுறவு சார்பதிவாளர் தர்மராஜ், திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அன்பழகன் மற்றும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலுவலர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business