அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் அமைச்சர் முத்துசாமி சுவாமி தரிசனம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் அமைச்சர் முத்துசாமி சுவாமி தரிசனம்
X

Erode news, Erode news today- அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் அமைச்சர் முத்துசாமி சுவாமி தரிசனம் செய்தார். அவருடன், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ‌.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் திருவிழாவையொட்டி, அமைச்சர் முத்துசாமி சனிக்கிழமை (இன்று) தரிசனம் செய்தார்.

Erode news, Erode news today- அந்தியூர் குருநாதசுவாமி கோவில் திருவிழாவையொட்டி, அமைச்சர் முத்துசாமி சனிக்கிழமை (இன்று) தரிசனம் செய்தார்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் தேர்த்திருவிழா மற்றும் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 முதல் 2022 வரை 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆடிப்பெருந்தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி (புதன்கிழமை) கோலாகலமாக கால்நடை சந்தைகளுடன் துவங்கி, நாளை (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.

இந்நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி குருநாதசுவாமி கோவிலுக்கு சனிக்கிழமை (இன்று) வந்தார். பின்னர், அவர் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, அவரை கோவில் பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் வரவேற்றார்.

Tags

Next Story