அந்தியூர் அருகே வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சாகுபடி - வாடகை வசூலிக்க கோரிக்கை

அந்தியூர் அருகே வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சாகுபடி - வாடகை வசூலிக்க கோரிக்கை
X

ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டுள்ளது.

Curative Petition - அந்தியூர் வரட்டுப்பள்ளம் ஆயக்கட்டு பகுதியில் எல்லைக்கல் அமைத்தும், பொதுப்பணித்துறை எச்சரிக்கையும் மீறி சாகுபடி செய்யப்பட்ட ஆக்கிரமப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Curative Petition - ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை ஆண்டுதோறும் வடக்கு பருவமழை காலங்களில் நிரம்பி வழியும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அந்தியூர் பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 3,000 மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அணையில் இருந்து ஆண்டு தோறும் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுகிறது. இதில் வாய்க்கால் பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, மூன்று வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன.

இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்ற வருகின்றனர்.வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்கள், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் அப்பகுதியில் உள்ளோர், விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இது சம்பந்தமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.


மேலும், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, சாகுபடி செய்யக்கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டது.ஏற்கனவே சாகுபடி செய்திருந்தவர்கள் அறுவடை செய்த பின்பு, மீண்டும் சாகுபடி செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், வரட்டுப்ப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வட்டக்காடு பகுதியில் உள்ள முதல் வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையும் மீறி அப்பகுதியில் உள்ள நபர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

வட்டக்காடு பகுதியில் உள்ள வாய்க்கால்களின் இரண்டு புறங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள், தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வாழை சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் எல்லைக்கல் நட்டதற்குப் பிறகும், அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர். நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இல்லையேல், வாய்க்கால் புறம்போக்கு பகுதியை பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து, மொத்தமாக வாடகை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai powered agriculture