அந்தியூரில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை..!

அந்தியூரில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை..!
X
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பருத்தி மூட்டைகள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை நேற்று முன்தினம் (22ம் தேதி) நடைபெற்றது.

Erode Today News, Erode News, Erode Live Updates - அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை நேற்று முன்தினம் (22ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்வது வழக்கம்.

தற்போது, பருத்தி அறுவடை நடைபெற்று வரும் நிலையில், விற்பனைக் கூடத்துக்கு பருத்தி மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் (22ம் தேதி) மட்டும் 4,729 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில், ஒரு கிலோ ரூ.65.59 முதல் ரூ.72.89 வரையிலும், சராசரியாக ரூ.71.39க்கும் விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக 1,790.97 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 18 லட்சத்து 6 ஆயிரத்து 387க்கு விற்பனையானது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை அந்தியூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் செய்திருந்தார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!