ஈரோடு மாவட்டத்தில் 77 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 77 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 77 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, கடந்த 3-ம் தேதி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 மாணவ மாணவிகள் உள்ளனர். கடந்த 3-ம் தேதி முதல், பள்ளிகளில், 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 77 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகை காரணமாக தொடர்ந்து 5 விடுமுறையால் கடந்த நாட்களாக தடுப்பூசி செலுத்தவில்லை. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி கொள்ளாத 15 வயது 18 வயதுடைய சிறுவர்கள், இன்று முதல் தங்களது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி செலுத்த செல்லும் சிறுவர்கள் பள்ளியின் அடையாள அட்டையை காண்பித்து செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்