/* */

ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 437 மையங்களில் 11-வது கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி முகாம், காலை முதல் மாலை வரை நடந்தது. இதுதவிர நடமாடும் வாகனம் மூலம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!