ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 29வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 29வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3,194 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 29வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என மொத்தம் 3,194 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்பட 4 ஆயிரத்து 260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

Tags

Next Story
ai and future cities