ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை, 19-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், 503 மையங்களில் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 18 கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) 19-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத, 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் இந்த தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இம்முகாமில், 1.50 லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 2,012 சுகாதார பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture