ஈரோடு மாவட்டத்தில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

ஈரோடு மாநகராட்சி காந்திஜி சாலையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கோவிட்-19 மாபெரும் இலவச முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் முகாமினை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் 1,597 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 64,405 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 1,597 இடங்களில் 32-வது சிறப்பு தடுப்பூசி மெகா முகாம்கள் நடந்தன. இந்த பணியில் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த முகாமில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று நடந்த 32-வது சிறப்பு மெகா முகாமில் 2,213 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 34,566 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 27,626 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 64 ஆயிரத்து 405 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்