ஈரோடு மாவட்டத்தில் 27.29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 27.29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசியானது 88.01 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 15 லட்சத்து 94 ஆயிரத்து 270 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசியானது 63.03 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், 11 லட்சத்து 35 ஆயிரத்து 61 பேருக்கும் என மொத்தம் 27 லட்சத்து 29 ஆயிரத்து 331 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் மாவட்ட துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!