ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியோர் 13.44 லட்சம் பேர்
ஈரோடு மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நவம்பர் 3-ந் தேதி வரை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 44 ஆயிரத்து 529 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இதேபோல் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக, தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஆகியன ஒன்றிணைந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவட்டத்தில் தினமும் 7 ஆயிரம் முதல், 8 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும், தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 20 லட்சத்து 68 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu