ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.2) 17வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.2) 17வது  கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை 543 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 543 இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 543 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 2,172 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதைத் தவிர ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு, அதாவது 2007ஆம் ஆண்டு பிறந்தவர்கள், அதற்கு முன்னதாகப் பிறந்தவர்களுக்கும் கோவேக்ஸின் வகை தடுப்பூசி பள்ளி, கல்வி நிறுவனங்களில் செலுத்தப்படவுள்ளது. புதிதாக வெளிநாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா