அந்தியூரில் தொடர் தேடுதல் வேட்டை: 4 யானை தந்தம் பறிமுதல்; 7 பேர் கைது
கைதானவர்களை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனப்பகுதிகளின் அருகாமையில் உள்ள கிராமங்களில் யானைத் தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்தியூர் அருகே உள்ள சந்திபாளையம் ராமசாமி தோட்டத்தில் போலீசார் சோதனையிடும் போது தென்ன மட்டைகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த மூன்று யானை தந்தங்களை எடுத்தனர்.
இது சம்பந்தமாக சந்திபாளையம் நடுவூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (40), புதுக்காடு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (47), பழைய பழைய பாளையம் பிரபு குமார் (37), வாணிபுத்தூர் கெம்பனூர் ஊராளி குமாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதி சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதிபாளையம் முருகப்பசெட்டியார் காலனி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (33), ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தலைமறைவான பர்கூர் மலைப்பகுதி பெஜில்பாளையத்தைச் சேர்ந்த சித்தேஷ், முருகன் ஆகிய ஆகிய இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். பிடிபட்ட யானைத் தந்தங்கள் மற்றும் குற்றவாளிகள் அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதேபோல் பர்கூர் மலைப்பகுதி பெரியூர் என்ற இடத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்னரையடி நீளமுள்ள ஒரு தந்தம் எடுக்கப்பட்டது. இதனைப் பதிக்க வைத்திருந்த பெரியூர் நாகன்(35) கைது செய்யப்பட்டார். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான பெரியூர் மாதேவன்(37) என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் பிடிபட்ட யானை தந்தம் மற்றும் குற்றவாளியை பர்கூர் ரேஞ்சர் பிரசாந்குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீஸாரால் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு ஜோடி யானை தந்தங்கள் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 யானை தந்தங்கள், 7 பேர் கைது செய்யப்பட்டு அந்தியூர், பர்கூர் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu