ஈரோடு இடைத்தேர்தல்: விதவை கோலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்
விதவை கோலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஆறுமுகம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னை கொரட்டூர் சேர்ந்த தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ் ஆறுமுகம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விதவை கோலத்தில் வேட்புமனு தாக்கல் வந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கரூரில் மதுபானம் அதிகம் விற்றதற்காக 74ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு மாநில வாணிப கழக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமையை பாராட்டி, மாவட்ட நிர்வாகம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த குடிபழக்கத்தினால் பல விதவைகள் உண்டாகியுள்ளனர். அதைக் கட்டுப்படுத்த நான் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் விதவைகள் நலனுக்காக நான் பேசுவேன்.
மதுவினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் யாரும் பேசுவதில்லை என்றும், தமிழகத்தினுடைய முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்த தொகுதியினுடைய திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேச தயாராக இருந்தால் இளம் விதவைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க தயாராக இருந்தால் எனது மனுவை நான் வாபஸ் பெறுவேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu