கோபிசெட்டிபாளையம் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோபி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.
கோபிசெட்டிபாளையம் நகர பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் இன்று (27ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விபத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் ஏற்படுகையில் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்க உதவியாக பலவேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோபியில் உள்ள அனைத்து வியாபாரிகளின் ஒத்துழைப்பினை வேண்டும் விதமாக அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோபி காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கோபி காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் ஜெகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு கடைவீதி மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில், கோபி நகரின் முக்கிய வணிக நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu