அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு
அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
அந்தியூர் பெரிய ஏரியில் ரூ.50 லட்சத்தில் படகு இல்லம் அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி மக்கள் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு இடங்களின்றி கொடிவேரி அணை, பவானிசாகர் அணை உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று வந்தனர்.
இந்நிலையில், அந்தியூர் பகுதி மக்களுக்கு சுற்றுலா தளமாக அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்க வேண்டும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, அந்தியூர் பெரிய ஏரியில், சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ரூ.50 லட்சம் படகு இல்லம் அமைக்கும் பணிக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி, பணியை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி துவக்கி வைத்தார்.
தற்போது, அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, ஊட்டி படகுத்துறையை சேர்ந்த சாம்சங், ஜெகதீசன், பச்சாம்பாளையம் ஊராட்சி அலுவலர் கேசவன் ஆகியோர் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu