கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமாரின் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமாரின் பிறந்தநாள் விழா
X

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

அந்தியூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில், அரசு மருத்துவமனையில் பால் மற்றும் ரொட்டி வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி நிரந்தர அழைப்பாளரும்,மேற்கு வங்கம், ஒடிசா, அந்தமான் நிக்கோபார், மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு பால் ரொட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் குறிச்சி சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பொன்னுச்சாமி ஆகியோர் பால் மற்றும் ரொட்டடியினை வழங்கினார்.

இதில், மருத்துவர் கவிதா, ஈரோடு வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், நகர துணைத்தலைவர் பொண்ணு பையன், நகர காங்கிரஸ் செயலாளர் கந்தசாமி, கிராம கமிட்டி தலைவர் தங்கமுத்து, அந்தியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் ராஜ்குமார், அந்தியூர் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!