அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநாடு
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 4-வது மாநாடு.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 4-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு, சங்கத்தின் தாலுக்கா தலைவர் சாவித்திரி தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் சகாதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சிபிஎம் தாலுக்கா செயலாளர் முருகேசன், விதொச தாலுக்கா செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பேசினர்.
மாநாட்டில், மாற்றுத்திறனாளுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 3000/- ஆகவும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5000/- ஆகவும் உயர்த்த வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை என்பதை 100 நாள் வேலையில் உறுதி செய்ய வேண்டும்.அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அந்தியூர் சமத்துவபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த நபரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில், மாநாட்டில் சங்கத்தின் அந்தியூர் தாலுக்கா தலைவராக சாவித்திரி, துணைத்தலைவர்களாக முருகேசன், நல்லப்பன், செயலாளராக முருகன், துணைச்செயலாளர்களாக மாரசாமி, மாதேஸ், பொருளாளராக அன்னக்கொடி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுக்கா செயலாளர் பழனிச்சாமி, சிபிஎம் மீனவர் கிளைச் செயலாளர் குருசாமி மற்றும் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu