பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை

பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை
X

பைல் படம்

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே செல்போன் பேசியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அரிஜன காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவரது மகள் கீர்த்தனா (17). இவர், நம்பியூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார்.

இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கவனித்த கீர்த்தனாவின் தந்தை லட்சுமணன், நேற்று அவரிடம் இருந்து போனை பிடுங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த கீர்த்தனா தூக்கிட்டு கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரம் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த லட்சுமணன், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, கீர்த்தனா தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!